பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேல்மருதாலம் பகுதியில் பஜனை கோவில் தெருவில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புஷ்பா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனது வீட்டில் திடீரென விஷம் குடித்து விட்டு கீழே மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி புஷ்பா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.