பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரங்கப்பனூர் பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு அங்கிருந்து திரும்பி வந்து கொண்டிருக்கும் போது கவிதா அவரது தாய் வீட்டில் தங்கிச் செல்லலாம் என கூறியுள்ளார். அதற்கு பிரபாகரன் மறுத்ததால் மன உளைச்சலில் இருந்த கவிதா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கவிதா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருமணமாகி 5 வருடங்கள் ஆவதால் கவிதாவின் சாவுக்கு வரதட்சணை கொடுமை காரணமா என கோட்டாட்சியர் சரவணன் விசாரணை நடத்தி வருகின்றார்.