பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குனியமுத்தூர் பகுதியில் மோகன்ராஜ் என்ற ஓட்டுனர் வசித்து வருகிறார். இவருக்கு ரத்தினம் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 20 வயதில் மகள் இருக்கிறாள். இந்நிலையில் தனது மகளுக்கு ரத்தினம் மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளார். ஆனால் பொருத்தமான வரன் அமையவில்லை. மேலும் பொருளாதார ரீதியிலும் மோகன் ராஜின் குடும்பத்தினர் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளனர்.
இதனால் வாழ்க்கையை வெறுத்த ரத்தினம் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்ற ரத்தத்தின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.