Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வாழ்க்கையில் விரக்தியடைந்த பெண்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வெங்கடாபுரம் கிராமத்தில் மோகன்தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு உஷா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் உஷா கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இந்நிலையில் வாழ்க்கையில் விரக்தியடைந்த உஷா வீட்டில் நிலத்திற்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்துக் குடித்துள்ளார்.

இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உஷாவை உடனடியாக மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி உஷா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |