Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ராமசாமிபுரம் பகுதியில் வெற்றிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்திரைலிங்கம் என்ற மகன் உள்ளார். இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜெயசித்ரா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 14 வருடங்கள் ஆகிறது. இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் ஜெயசித்ரா அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக ஜெயசித்ரா உடன்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் வயிற்று வலி குறையாததால் ஜெயசித்ரா கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சித்திரைலிங்கம் கடந்த 6-ஆம் தேதி வீட்டில் இருந்து வேலைக்கு சென்றுவிட்டார். அப்போது வீட்டில் யாருமில்லாத சமயத்தில் ஜெயசித்ரா அங்கிருந்த சாணி பவுடரை எடுத்து கலக்கி குடித்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து வீட்டிற்கு வந்த சித்திரைலிங்கம் ஜெயசித்ராவை உடனடியாக மீட்டு உடன்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன்பின் மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஜெயசித்ரா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த குலசேகரப்பட்டினம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |