விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கொட்ட குளம் கிராமத்தில் பவன்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நர்மதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு பபினேஷ், அபினேஷ் என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக நர்மதா வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்துவிட்டார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் நர்மதாவை உடனடியாக மீட்டு செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி நர்மதா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.