பெண் வியாபாரியை மிரட்டியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தேவர்குளம் பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் பால் முத்தையா என்பவர் கடைக்கு சென்று குடிநீர் பாட்டில் மற்றும் டம்ளர் வாங்கியுள்ளார். அதற்கு பணம் கொடுக்காததால் மகாலட்சுமி அவரிடம் பணம் கேட்டுள்ளார்.
அப்போது பால் முத்தையா மகாலட்சுமியை அவதூறாக பேசி மிரட்டியுள்ளார். இதுகுறித்து மகாலட்சுமி தேவர்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பால் முத்தையாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.