சேலம் மாவட்டத்தில் முழு ஊரடங்கின் போது இறைச்சி கடை திறந்து விற்பனை செய்த 2 பேருக்கு தலா 5 ஆயிரம் வீதம் மொத்தம் 10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ஞாயிற்றுக்கிழமையன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் காவல் துறையினர் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளதா என்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது தலைவாசல் பகுதியிலுள்ள வீரகனூர், வேப்பம்பூண்டி ஆகிய பகுதிகளில் இறைச்சி கடை திறந்து விற்பனை செய்த இரண்டு பேருக்கு தலா 5 ஆயிரம் வீதம் மொத்தம் 10 ஆயிரம் ரூபாய் காவல் துறையினர் அபராதம் விதித்து வசூலித்துள்ளனர்.