சேலம் மாவட்டத்தில் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றித்திரிந்த 49 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள கெங்கவல்லி பகுதியில் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது ஊரடங்கை மீறி தேவையின்றி வெளியில் சுற்றித்திரிந்த மற்றும் முக கவசம் அணியாத 49 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 23 ஆயிரத்து 300 ரூபாய் அபராதம் வசூலித்தனர்.