Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நீங்க எப்படி சிகிச்சை அளிக்கலாம்… அதிகாரியின் அதிரடி நடவடிக்கை… அபராதம் வசூல்…!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த மருந்து கடைகள் மற்றும் ரத்த பரிசோதனை நிலையத்தை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர்.

சேலம் மாவட்டத்திலுள்ள பெத்தநாயக்கன்பாளையம் பகுதியிலுள்ள மருந்து கடைகள் மற்றும் ரத்த பரிசோதனை மையங்களில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் மருத்துவ அலுவலர் சங்கர், பெத்தநாயக்கன்பாளையம் துணை தாசில்தார் நல்லுசாமி மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோர் அப்பகுதிக்கு சென்று மருந்து கடைகளில் திடீரென சோதனை நடத்தியுள்ளனர்.

அந்த சோதனையின் போது அங்குள்ள 3 மருந்து கடைகள் மற்றும் ரத்த பரிசோசோதனை நிலையத்தில் ஒருக்கடையில் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்ததற்கான ஆதாரங்களை குழுவினர் கண்டுப்பிடித்துள்ளனர். இதனால் அந்த மருந்து கடைகள் மற்றும் ரத்த பரிசோதனை நிலையத்தை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர். மேலும் உரிமையாளர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

Categories

Tech |