Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இப்படியெல்லாம் செய்யக்கூடாது… அதிகாரியின் அதிரடி நடவடிக்கை… அபராதம் வசூல்…!!

சேலம் மாவட்டத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் மருந்து வழங்கிய கிளினிக்கை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளார்.

சேலம் மாவட்டத்திலுள்ள வீரகனூர் பழைய பேருந்து நிலையத்தில் ஓமியோபதி மருத்துவர் சீதாராமன் கிளினிக் வைத்துள்ளார். அவரது கிளினிக்கில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் மருந்து விற்பனை செய்வதாகவும் மேலும் மருத்துவம் பார்ப்பதாகவும் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அந்த தகவலின் பேரில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் லத்தீஷ்குமார், காவல் துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்த போது சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் மருத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து அதிகாரிகள் ஒமியோபதி மருத்துவர் சீதாராமனுக்கு ரூபாய் 5 ஆயிரம் அபராதம் விதித்ததுடன் கிளினிக்கை பூட்டி சீல் வைத்துள்ளனர்.

Categories

Tech |