நிலுவையில் உள்ள ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையை விரைந்து வழங்கிட மத்திய அரசுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளனது. இதனால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 40வது கூட்டம் காணொலி மூலம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து மாநிலங்களின் நிதியமைச்சர்கள், மத்திய நிதியமைச்சர், மத்திய அரசு உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
ஜிஎஸ்டி கவுன்சில் குழுக்கூட்டத்தில் கூட்டத்தில் வைரஸ் ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு, மாநிலங்களுக்கு ஏற்பட்ட வரி வருவாய் இழப்பு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் தமிழகம் சார்பில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய அவர், நிலுவையில் உள்ள 2017-18ம் ஆண்டிற்கான ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகை ரூபாய் 4 ஆயிரத்து 73 கோடி ரூபாயையும்,
2018-2019 ஆண்டிற்கு நிலுவையில் உள்ள 553 கோடி ரூபாயையும், 2019-2020ம் ஆண்டிற்கு நிலுவையிலுள்ள ஆயிரத்து 101 கோடியையும் மத்திய அரசு விரைந்து வழங்கிட வேண்டும் என வலியுறுத்தினார். ஆயத்த ஆடைகள் மீதான வரியை 5%ல் இருந்து 15% உயர்த்துவது ஏற்புடையதல்ல என்றும் அவர் கூறியுள்ளார். இந்த கூட்டத்தில் ஜி.எஸ்.டி. நடைமுறைகளை எளிமைப்படுத்துவதற்கான மற்றும் மனிதர்களுக்கு பயனளிக்கக்கூடிய சட்டக்குழுவின் பல்வேறு பரிந்துரைகள் விரிவான விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.