பாகிஸ்தான் நாட்டில் புகை பிடிப்பவர்களில் ஐந்தில் இருவர் பெண்களாகவுள்ளார்கள் என்று அந்நாட்டின் நாடாளுமன்ற சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் நாட்டில் விவாகரத்து தொடர்பான வழக்குகள் 58% அதிகரித்துள்ளதாக கிலானி என்ற அமைப்பு நடத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானில் நடைபெற்ற புகையிலை குறித்த மாநாட்டில் கலந்து கொண்ட அந்நாட்டை ஆளும் கட்சியின் பெண் எம்.பியான டாக்டர் நாவுஹீன் பெண்கள் புகைப்பிடிப்பதாலயே விவாகரத்து தொடர்பான வழக்குகள் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஏனெனில் பெண்கள் புகைப்பிடிப்பதை அவர்கள் திருமணம் செய்து கொண்டு செல்லும் வீட்டில் ஏற்றுக்கொள்ள முடியாமல் விவாகரத்து வரை செல்வதால் இது தொடர்பான வழக்குகள் அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து பாகிஸ்தான் நாடாளுமன்ற சுகாதாரதுறை செயலாளர் பாகிஸ்தான் நாட்டில் புகைபிடிப்பவர்கள் ஐந்தில் இரண்டு பேர் பெண்களாகவுள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார்.