தேசிய ஊரக வேலை திட்டத்தில் 100 நாட்கள் வேலை வழங்குமாறு பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சங்கந்திரடு பகுதியில் வசிக்கும் பெண்கள் பாப்பாக்குடி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதன் பின் அவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலரான பாலசுப்ரமணியனிடம் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறுவதாவது, எங்கள் பகுதியில் தேசிய ஊரக வேலை திட்டத்தில் வருடத்திற்கு 100 நாட்கள் வேலை வழங்காமல் 40 நாட்கள் மட்டுமே வேலை வழங்குகின்றனர்.
எனவே அனைவருக்கும் 100 நாட்கள் வேலை வழங்குமாறு கூறியுள்ளனர். அதன் பின் 7 உரக்குழிகள் கட்ட அனுமதிக்கப்பட்ட நிலையில் 3 மட்டுமே கட்டப்பட்டிருப்பதால் மற்ற உரக்குழிகளை விரைவில் கட்டி முடிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.