மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் ஊரக வேலை திட்ட அடையாள அட்டையுடன் ஏராளமான பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியரை சந்தித்த அவர்கள் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
அந்த மனுவில் மேல்பாக்கம் பகுதிக்கு தேசிய ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் சரியான பணி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனால் எங்களுக்கு வேலை மறுக்கப்படுகிறது. எனவே பெண்களுக்கு சீராக வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.