பெண்களிடம் சங்கிலி பறித்த வழக்கில் மேலும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கரைசுத்துப்புதூர் பகுதியில் ஓய்வு பெற்ற ஆசிரியையான விமலா வசந்தகுமாரி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரும் மன்னார்புரம் பகுதியில் வசிக்கும் மரிய பெப்பின் என்ற ஆசிரியரும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் அவர்கள் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் உவரி, திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஏற்கனவே சண்முகவேல் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 16 பவுன் நகைகளை பறித்து சென்றனர். இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முடிவைத்தானேந்தல் பகுதியில் வசிக்கும் அருண்குமார் என்பவரை உவரி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.