Categories
தேசிய செய்திகள்

பெண்களின் பாதுகாப்புக்காக என் தோழி திட்டம் அறிமுகம்…!!

ரயில்களில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்புக்காக என் தோழி என்ற பெயரில் புதிய திட்டத்தை இந்திய ரயில்வே தொடங்கி உள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் இத்திட்டத்தின்படி ஒரு பெண் ரயிலில் ஏறும் இடத்தில் இருந்து இறங்கும் வரை அவரது பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும், ரயிலில் செல்லும் பெண் பயணிகள் குறிப்பாக தனியாக செல்லும் பயணிகளை அணுகும் ரயில்வே பாதுகாப்பு படையினர் பயணத்தின் போது எப்படியெல்லாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

பயணத்தின்போது பிரச்சனை எதுவும் ஏற்படாமல் 182 என்ற எண்ணுக்கு அழைத்து உதவி கோரலாம் என அறிவுறுத்திய ரயில்வே நிர்வாகம், இது போன்றவர்களுக்கு விரைந்து உதவி வழங்கப்படுவதுடன் இந்த நடைமுறை சரியாக அனுசரிக்கப்படுகிறதா என மூத்த அதிகாரிகளும் கண்காணிப்பர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் பெண் பயணிகளின்  கருத்துக்களை கேட்டு அதன் அடிப்படையில் தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்த ரயில்வே நிர்வாகம் தென்கிழக்கு ரயில்வேயில் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம் பெண் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருந்தால் இது நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |