Categories
மாநில செய்திகள்

ஆதரவற்ற விடுதியில் இருக்கும் பெண்கள்… அதிகாரிகளின் அட்டூழியத்தால் படும் அவஸ்தை… அதிர்ச்சியில் மக்கள்..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் விசாரணை என்ற பெயரில் பெண்கள் விடுதிக்குள் புகுந்து அவர்களை மிரட்டி ஆடையின்றி நடனமாட வைத்த சம்பவம், மக்களின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள கணேஷ்  நகரில் மாநில அரசின் சார்பில் பெண்கள் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகின்றது.  இவ்விடுதியில் ஆதரவற்ற பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு என தங்கும் வசதியும் இலவச உணவும் அளிக்கப்பட்டு வந்தன .

இந்நிலையில் போலீசார் மற்றும் அங்கு தங்கியிருக்கும் ஊழியர்கள் பெண்களிடம் விசாரணை என்ற பெயரில் அவ்விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து  அவர்களை மிரட்டி ஆடைகளை களைய செய்து நடனமாட சொல்லி  துன்புறுத்தி அதை வீடியோவாக அவர்களது செல்போனில் பதிவுசெய்துள்ளனர். இதுமட்டுமின்றி இந்த வீடியோ காட்சிகள் ஊடகங்களிலும் வெளியிட்டுள்ளனர்.

இச்சம்பவம் மக்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது . மேலும்  இதுதொடர்பாக உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கூறியதாவது,

இது மிகவும் துரதிர்ஷ்டவசமான நிகழ்வு  இச்செய்தி பற்றி முழுவதுமாக  விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க 4 பேர் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது  என்றும் ,மேலும் இரண்டு நாட்களில் விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

.

Categories

Tech |