Categories
தேசிய செய்திகள்

பெங்களூரில் வன்முறை…வெளியாகிய வீடியோ பதிவால் பரபரப்பு…!!!

பெங்களூரு வன்முறை தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெகுவாக பரவியதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுபான்மையினர் சமுதாயம் பற்றி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அகண்ட சீனிவாசமூர்த்தியின் உறவினர் நவீன் என்பவர் முகநூலில் அவதூறு கருத்து ஒன்றை பதிவு செய்திருந்தார். அதனால் சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்கள்  உள்பட 100க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றிணைந்து  அகண்ட சீனிவாசமூர்த்தி எம்.எல்.ஏ.வின் வீடு மற்றும் அலுவலகத்திற்கும் , அவரது உறவினரான நவீனின் வீட்டிற்கும் தீ வைத்துள்ளனர். மேலும் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளார்.
மேலும் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம்.எந்திரமும் சேதப்படுத்தப்பட்டது. வன்முறையாளர்களை விரட்டுவதற்கு காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். அதனால் ஆத்திரம் அடைந்த வன்முறையாளர்கள், போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். அதில் காவல் அதிகாரிகள் 60 பேர் வரை காயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் பெங்களூருவில் 3 இடங்களில் நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 150 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் அகண்ட சீனிவாசமூர்த்தி எம்.எல்.ஏ.வின் வீடு மற்றும் அலுவலகம், காவல்  நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், காவல் பைரசந்திரா பகுதியில் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் ஆகியவை தொடர்பான வீடியோ காட்சிகள் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்தன. அந்த வீடியோ காட்சிகள் நேற்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |