மாடு மேய்க்க சென்ற பெண்ணிடம் வாலிபர்கள் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள கடவூர் தாலுகா பாலப்பட்டியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செஞ்சியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் செஞ்சியம்மாள் தோட்டத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது மோட்டார் சைக்கிளில் 20 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் வந்து அவரின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இது பற்றி செஞ்சியம்மாள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற வாலிபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.