பெண்கள் இணைந்து சுகாதார நடைபயண ஊர்வலம் நடைபெற்றுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள எலவம்பட்டி ஊராட்சி சார்பாக தூய்மை பாரத இயக்கம் அமீரகத்தில் நீர் மேலாண்மை இயக்கத்தின் முன்மாதிரி கிராமமாக மாற்றிடும் திட்டத்தினை ஊராட்சி மன்ற தலைவர் விவேகானந்தன் தலைமையில் வார்டு உறுப்பினர்கள் முன்னிலையில் சுகாதார நடைபயண ஊர்வலம் நடைபெற்றது. இதை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கவிதா பங்கேற்று தொடங்கி வைத்துள்ளார். இவை கிராமம் முழுவதும் சென்று ஊராட்சி மன்ற அலுவலகத்தில் முடிந்துள்ளது.
இதனையடுத்து அங்கு நடந்த கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல்கலாம் பங்கேற்றுள்ளார். பின்னர் முன்மாதிரி கிராமமாக தேவைப்படும் கழிவுநீர் மேலாண்மை வசதிகள், தனி நபர் உறிஞ்சு குழிகள், சமுதாய உறிஞ்சு குழிகள், அனைத்து வீடுகளிலும் கழிப்பறை அமைக்க வேண்டும், திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கத்தை போக்குதல், நீர்நிலைகளை தூய்மையாக பாதுகாத்தல், பொது வெளிகளில் கழிவு நீர் தேங்காமல் இருக்க வேண்டும் உள்பட அனைத்து பணிகளை இத்திட்டத்தின் கீழ் ஊராட்சியில் செயல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.