பெண்கள் கர்ப்பமடைந்திருப்பதை பற்றிய தரவுகளை ஆய்வகங்கள் அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஈரானின் வடக்கில் உள்ள மஜந்தரன் மாகாணத்தில் நீதித்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் “ஆய்வகங்கள் கருவுற்றிருக்கும் பெண்கள் குறித்த விவரங்களை அரசுக்கு தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் சட்டத்திற்கு புறம்பாக நடக்கும் கருக்கலைப்பு சம்பவங்களை தடுக்க முடியும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை அறிந்த ஈரானைச் சேர்ந்த பெண்கள் அரசின் மீது கடுமையான கோபத்தில் உள்ளனர்.
மேலும் இதற்கு ஒரு பெண்மணி கூறியதில் “தனிமனித சுதந்திரம் மற்றும் உரிமை என்பது பறிபோய் விட்டது” என்று கூறியுள்ளார். அதிலும் ஈரான் நாட்டை பொறுத்தவரை கருக்கலைப்பு என்பது சட்டத்திற்கு புறம்பான செயலாகும். குறிப்பாக பிறக்கப்போகும் குழந்தைக்கும் அதன் தாய்க்கும் ஆபத்து ஏற்படும் என்று மருத்துவர்கள் உறுதி அளித்தால் மட்டுமே சட்ட ரீதியான கருக்கலைப்பிற்கு அனுமதி அளிக்கப்படும். ஒருவேளை திருமணம் ஆகாமல் பெண்கள் கருவுற்று அதனை கலைப்பது ஈரானில் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கையாகும்.
குறிப்பாக ஈரானில் ஆண்டொன்றிற்கு சட்டரீதியாக 9,000 கருக்கலைப்புகள் செய்யப்படுகின்றன. ஆனால் சட்டத்திற்கு புறம்பாக 2, 50,000 கருக்கலைப்புகள் செய்யப்படுவதாக ஈரானினின் சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் சட்டத்திற்குப் புறம்பாக கருக்கலைப்பு செய்யும் மருத்துவர்களுக்கும் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.