சேறும், சகதியுமாக இருக்கும் சாலையில் பெண்கள் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள பிள்ளையார் கோவில் தெருவில் 500-க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் இருக்கும் சாலை சேதமடைந்து சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் சிரமப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இது பற்றி புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதனால் கோபம் அடைந்த அப்பகுதி பெண்கள் சேறும், சகதியுமான சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அவர்கள் புதிதாக சாலை அமைக்குமாறு கோஷங்களை எழுப்பி உள்ளனர். இதனை தொடர்ந்து விரைந்து சாலையை சீரமைக்க வில்லை என்றால் அடுத்த கட்டமாக ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக கூறி அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.