குண்டும் குழியுமாக இருக்கும் தார் சாலையை சீரமைத்து தருமாறு பெண்கள் சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள எரங்காடு கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் எரங்காடு பிரிவு சாலையில் இருந்து நடுநிலைப்பள்ளி வரை 1 1/2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை தற்போது பழுதடைந்து குண்டும் குழியுமாக இருக்கிறது. இதனால் தார் சாலையை சீரமைத்து தருமாறு கிராம மக்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு மனு அளித்துள்ளார்.
ஆனால் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பின்னர் தற்போது மழை பெய்து தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அந்த வழியாக செல்வதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பழுதடைந்த தார் சாலையை சீரமைத்து தருமாறு பெண்கள் சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து தார் சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டைகளை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்து விடுவதாக பெண்கள் கூறியுள்ளனர்.