2 விடுதிகளில் அனைத்து மகளிர் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 5 பேரை கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல்துறையினர் தங்கும் விடுதியில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அங்கு பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தியது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் விசாரணையில் சாத்தப்புதூர் கிராமத்தில் வசிக்கும் உஷா என்பவர் விடுதி மேலாளர் பிரகாஷ் என்பவரின் உதவியுடன் உதயமாம்பட்டு கிராமத்தில் வசிக்கும் ஏழுமலை என்பவருக்கு 3 பெண்களை கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து பிரகாஷ், உஷா மற்றும் ஏழுமலை ஆகிய 3 பேரையும் அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்து விபச்சாரத்தில் ஈடுபட்ட மூன்று பெண்களையும் மீட்டுள்ளனர். இதைப்போல் துருகம் சாலையில் இருக்கும் தங்கும் விடுதியில் நடத்திய அதிரடி சோதனையில் சங்கராபுரத்தில் வசிக்கும் கலா உலகங்காத்தான் கிராமத்தில் வசிக்கும் அசோகன் ஆகியோர் மூன்று பெண்களை கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. பின்னர் அசோகன், கலா ஆகிய 2 பேரையும் அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட மூன்று பெண்களையும் மீட்டுள்ளனர்.