Categories
உலக செய்திகள்

பெண்களுக்கு கிடையாது…. பரிசுக்குழு திட்டவட்டம்…. தகவல் வெளியிட்ட அறிவியல் அகாடமி தலைவர்….!!

பெண்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்பது தொடர்பாக ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமியின் தலைவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

நோபல் பரிசு வழங்குவதில் பெண்கள் மற்றும் இன ஒதுக்கீடு தொடர்பாக அளிக்கப்படும்  எந்தவொரு நடைமுறையையும் அமல்படுத்தப் போவதில்லை என்று ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமியின் தலைவரான கோரன் ஹன்சன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதில் “முக்கிய கண்டுபிடிப்பிற்காக மட்டுமே பரிசு அளிக்கப்பட வேண்டும். பாலினம் அல்லது இனத்திற்காக வழங்கப்படமாட்டாது. அதிலும் நோபல்பரிசு கொடுக்கப்பட்ட ஆண்டிலிருந்து இதுவரை 59 பெண்கள் மட்டுமே பெற்றுள்ளனர். இந்த ஆண்டு ஒரே ஒரு பெண் மட்டுமே பெற்றுள்ளார்.

குறிப்பாக நோபல் பரிசை குறைந்த எண்ணிக்கையிலான பெண்களே பெறுகிறார்கள் என்பது மிகவும் கவலையளிக்கும் விஷயமாகும். மேலும் சமுதாயத்தின் நியாமற்ற தன்மையானது அண்மைகாலமாக அதிகரித்து வருகிறது. இதற்காக நாம் நிறைய செயல்பாடுகளை செய்ய வேண்டியுள்ளது” என்று பிரபல நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அதிலும் ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக பரிசுக்குழு முடிவெடுக்கவில்லை எனினும் அதிக எண்ணிக்கையில் பெண்களை பரிந்துரைக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |