Categories
அரசியல்

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வலி…. இந்த யோகாசனத்தை செய்து பாருங்க…. நல்ல பலன் கிடைக்கும்….!!!

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் பலவிதமான பிரச்சனைகள் மற்றும் உடம்பில் வலி ஏற்படும். இந்த மாதவிடாய் நேரத்தில் பெண்களுக்கு இடுப்பு வலி மற்றும் அடிவயிற்றில் வலி ‌ஏற்படும். இந்த வலியை குறைப்பதற்கு சில யோகாசனங்கள் செய்யலாம்.

பாலாசனம்: இந்த ஆசனத்தை செய்யும் போது முதலில் தரையில் அமர்ந்து கொள்ள வேண்டும். அதன்பிறகு கால் விரல்களை ஒன்றாக சேர்த்து கால்கள் இரண்டும் சற்று விலகி இருக்குமாறு தரையில் மண்டியிட வேண்டும். இதனையடுத்து மூச்சை வெளியே விட்டு முன்னோக்கி குனிய வேண்டும். அதன்பிறகு வயிறு பகுதியில் தொடையை தொடுமாறு வைத்துவிட்டு தலையை குனிந்து கைகளை முன்னோக்கி நீட்ட வேண்டும். சில வினாடிகள் கழித்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி விடலாம்.

பத்த கோனாசனா: இந்த யோகாசனத்தை செய்யும் போது முதலில் தரையில் அமர்ந்து கொண்டு கால்களை முன்னோக்கி நீட்ட வேண்டும். அதன்பிறகு நீட்டிய கால்களை மடித்து முழங்கால்களுக்கு இடையில் பாதங்களை வைக்க வேண்டும். இதனையடுத்து கால் விரல்களை கைகளால் பிடித்து கொண்டு குதிகால்களை இடுப்புக்கு அருகில் கொண்டு வர வேண்டும். மூச்சை நன்கு உள் வாங்கிக்கொண்டு வெளியே விட்டு முழங்கால்கள் தரையைத் தொட வேண்டும். அதன் பிறகு மூச்சை உள்வாங்கி  இடுப்பைக் கொண்டு தரையை தொட வேண்டும்.

உத்தாசனம்: இந்த யோகாசனத்தை நின்றுகொண்டே செய்ய வேண்டும். இதற்கு முதலில் கைகளை இடுப்பு மற்றும் பாதம் அளவிற்கு பக்கவாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் மூச்சை உள்வாங்கி கொண்டு முதுகெலும்பை நீட்டி கைகளை மேல் நோக்கி தூக்க வேண்டும். இதனையடுத்து மூச்சை வெளியேவிட்டு இடுப்பை முன்னோக்கி வளைத்து டார்ஸோ கால்களுக்கு அருகில் இருக்க வேண்டும். இப்படி நின்றுகொண்டே மூச்சை உள்வாங்கி கொண்டு கைகளை இடுப்பில் வைத்துக் கொண்டு வால் எலும்பை அழுத்தி வயிற்று தசைகளை சுருக்கி மெதுவாக உயர்த்த வேண்டும்.

விபரீதகரணி: விபரீதகரணி என்பதற்கு தலைகீழ் என்பது அர்த்தமாகும். இந்த யோகாசனத்தை செய்யும்போது ஒரு சுவருக்கு அருகில் கீழே உட்கார வேண்டும். அதன் பின் கால்களை சுவரின் மேலே உயர்த்தி முதுகை தரையில் வைக்க வேண்டும். உங்களுடைய உடம்பை 90 டிகிரி சாய்வான கோணத்தில் வைத்துக் கொண்டு கண்களை மூடி கைகளை பக்கவாட்டில் வைத்து விட்டு மூச்சை நன்கு உள்ளிழுத்து வெளியே விட வேண்டும்.

தலையிலிருந்து முழங்கால் நிலை யோகாசனம்: இதற்கு முதலில் தரையில் அமர்ந்து கொண்டு கால்களை நீட்ட வேண்டும். அதன்பிறகு இடது முழங்காலை வலது முழங்காலின் உள் தொடையில் வைத்து விட்டு, இடது முழங்காலை‌ வளைக்க வேண்டும். இதனையடுத்து இடுப்பை முன்னோக்கி சாய்த்து கைகளால் வலது பாதத்தை கைகளால் பிடிக்க வேண்டும்.

சுப்தா பத்தா கோனாசனம்: இந்த யோகாசனம் செய்யும் போது தரையில் உட்கார்ந்து கொண்டு கால்கள் இரண்டையும் பக்கவாட்டில் நீட்ட வேண்டும். அதன்பிறகு கைகளை பக்கவாட்டில் வைத்துக் கொண்டு முதுகு பகுதியால் படுத்துக்கொள்ள வேண்டும். இதனையடுத்து முழங்கால்களை வளைத்து இரண்டு உள்ளங்கால்களையும் மையத்தில் கொண்டு வந்துவிட்டு கைகளை வெளிப்புறமாக நீட்டி மூச்சை நன்றாக உள்ளிழுத்து வெளியே விட வேண்டும்.

Categories

Tech |