மாடல் அழகிகளை போட்டோஷூட் நடத்துவதாக கூறி தவறாக புகைப்படம் எடுத்த துப்பறியும் ஆராய்ச்சியாளர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியுள்ளார்.
லண்டனில் துப்பறியும் ஆராய்ச்சியாளராகவும் பயங்கரவாத தடுப்பு அதிகாரியாகவும் பணியாற்றியவர் 40 வயதான நீல் கோர்பெல். இவர் தற்போது தனது பெயரை ‘Harrison’ என மாற்றிக் கொண்டு தான் ஒரு விமானி மற்றும் புகைப்பட கலைஞர் எனவும் கூறி பல மாடல் அழகிகளை ஏமாற்றி வருகிறார். இவர் மாடல் அழகிகள் மற்றும் பெண்களைன் தனது வீட்டிற்கு அல்லது தனியார் சொகுசு விடுதிக்கு அழைத்து போட்டோஷூட் நடத்தியுள்ளார். ஆனால் வந்த பெண்களுக்கே தெரியாமல் அவர்களை ஆடையின்றி நிர்வாணமாக வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்துள்ளார். மேலும் அவரின் வீடு மற்றும் நீல் தங்கியுள்ள விடுதி அறைகளில் கடிகாரங்கள், மொபைல் சார்ஜர், கண்ணாடி, கார் சாவி என்ற பல பொருள்களில் மறைவாக கேமராக்களை பொருத்தி அங்கு வரும் பெண்கள் குளிப்பது, உடை மாற்றுவது போன்ற செயல்களில் அவர்களுக்கே தெரியாமல் பல மணி நேரம் வீடியோ எடுத்துள்ளார்.
இவ்வாறு இவர் கிரேட்டர் லண்டன், மான்செஸ்டர், பிரைட்டன் போன்ற பகுதிகளில் கடந்த ஆண்டு ஜனவரி 2017 முதல் பிப்ரவரி வரை பல பெண்களை ஏமாற்றி வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துள்ளார். அதிலும் சுமார் 51 பெண்களின் புகைப்படங்கள் அவரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது. குறிப்பாக அதில் 19 பெண்கள் அடையாளம் காணப்பட்டு விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவதாக கூறியுள்ளனர். மேலும் பெயர் தெரியாத ஒரு பெண் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க ஒப்புக் கொண்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து மற்ற பெண்கள் அனைவரும் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதிலும் ஒரு மாடல் அழகி போட்டோஷூட் நடத்துவதற்காக அந்த அறைக்குள் சென்ற போது கடிகாரத்தில் கேமரா இருப்பதை தெரிந்து கொண்ட அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதற்கு பிறகே நீல் கோர்பெல் பெண்களை ஏமாற்றியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
தற்பொழுது அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து தொழில்முறை தரநிலைகள் இயக்குனரகம் அவரை விசாரணைக்காக நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்ப்படுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து அவரே பெண்களை ரகசியமாக புகைப்படங்கள் எடுத்தேன் என ஒப்புக்கொண்டார். இந்த நிலையில் அவருக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு அடுத்த மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதிலும் தண்டனை விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அக்டோபர் 4 தேதி வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு சம்பந்தமாக தடவியல் உளவியலாளர் மற்றும் போதை நிபுணரின் தரவுகள் நீதிமன்றத்தில் வழங்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.