உச்சி மாநாட்டில் ட்ரம்பின் கவனத்தை திசை திருப்புவதற்காக புடின் இளம்பெண் ஒருவரை அழைத்து வந்தார்.
முன்னால் வெள்ளை மாளிகை செயலரான Stephanie Grisham தான் எழுதியுள்ள புத்தகத்தில் கூறியதாவது “ஜப்பானில் 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற உச்சி மாநாட்டில் பங்கேற்ற புடின் ஒரு கவர்ச்சியான பெண்ணை மொழி பெயர்ப்பாளராக அழைத்து வந்ததார். அவர் ட்ரம்பின் கவனத்தை திசை திருப்புவதற்காக பெண்ணை அழைத்து வந்து இருக்கலாம் என நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
அந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள பெண் Daria Boyarskaya என தெரியவந்துள்ளது. ஆனால் இந்த விஷத்தை புடினுடைய செய்தி தொடர்பாளர் Dmitry Peskov மறுத்து விட்டார். ஆகவே புடினுடைய மொழிபெயர்ப்பாளரை தேர்ந்தெடுப்பது வெளியுறவு அமைச்சகம் தான் என்று கூறினார். இதனால் அதற்கும் புடினுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் புடின் அதிலெல்லாம் தலையிடுவது இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்