Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

துணி துவைக்க வந்த இடத்தில்…. பெண்ணுக்கு கொலை மிரட்டல்…. கைது செய்த போலீஸ்….!!

பெண்ணை அவதூறாக பேசிய கட்டிட தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வைரவம் கிராமத்தில் மாயாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயகலா என்ற மனைவி உள்ளார். இவர் வைரவம் தருவை குளத்தில் துணி துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது தாமரைமொழி பகுதியில் வசிக்கும் கட்டிட தொழிலாளியான பாஸ்கர் என்பவர் குளிக்க வந்துள்ளார். அப்போது ஜெயகலாவுக்கும், பாஸ்கருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த பாஸ்கர் ஜெயகலாவை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து ஜெயகலா தட்டார்மடம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த ஜெயகலாவை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |