பெண்ணை கத்தியால் குத்தியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெரணம்பாக்கம் பகுதியில் வேதமுனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூங்காவனத்தம்மாள் என்ற மனைவி உள்ளார். இதனையடுத்து அதே பகுதியில் திருமலை என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பூங்காவனத்தம்மாள் பெரணம்பாக்கம் கிராமத்தில் உள்ள பால் சொசைட்டி அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த திருமலை பூங்காவனத்தம்மாளை வழிமறித்து அவதூறாக பேசி அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் வயிற்றில் சரமாரியாக குத்தியுள்ளார்.
இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் பலத்த காயமடைந்த பூங்காவனத்தம்மாளை உடனடியாக மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதன் பின் மேல் சிகிச்சைக்காக பூங்காவனத்தம்மாளை வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பூங்காவனத்தம்மாளின் மகன் அகிலன் சேத்துப்பட்டு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் திருமலையை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.