Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மகன்களுடன் தூங்கிக்கொண்டிருந்த பெண்…. கள்ளக்காதலனின் கொடூர செயல்…. போலீஸ் வலைவீச்சு….!!

2 மகன்களுடன் பெண்ணை கொலை செய்த கள்ளக்காதலனை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள அம்மையப்பன் குடவாசல் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துமாரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தரணிஷ், நித்திஷ் என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக முத்துமாரி கணேசனை விட்டு பிரிந்து தனது 2 மகன்களுடன் திருப்பூர் வாலிபாளையத்தில் கள்ளக்காதலன் கோபாலுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கள்ளக்காதலன் கோபால் கடந்த 22-ந் தேதி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த முத்துமாரி மற்றும் அவருடைய 2 மகன்களை கொலை செய்து விட்டு அங்கிருந்து தலைமறைவானார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த திருமுருகன்பூண்டி காவல்துறையினர் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கோபாலை தேடி வந்தனர்.

இந்நிலையில் கோபால் பயன்படுத்திய செல்போன் எண்ணின் டவர் மூலமாக அவரை பிடிப்பதற்கான முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து படியூர் பகுதியில் கோபால் பதுங்கியிருக்கலாம் என தனிப்படை காவல்துறையினர் அவரை தேடி வருகின்றனர். இந்நிலையில் படியூர் பகுதியில் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பாபு கோபாலை தேடும் பணிகளை நேரில் ஆய்வு செய்தார். மேலும் துணை கமிஷனர், உதவி கமிஷனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் அப்பகுதியில் கொலையாளியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |