மத்தியப்பிரதேசம் ரேவா மாவட்டத்தில் காதலியை தாக்கி சாலையில் மயக்க நிலையில் சுயநினைவின்றி விட்டுச் சென்ற காதலனையும், அவனது கூட்டாளியையும் காவல்துறையினர் கைது செய்தனர். மவுகஞ்ச் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சென்ற 21ஆம் தேதி இந்த சம்பவம் அரேங்கேறியுள்ளது. அதுகுறித்த வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வைரலானதை அடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
வீடியோவில் அந்த நபர் பெண்ணை கொடூரமாக அடித்து கீழே தள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அதன்பின் அந்த பெண் மயக்கமடைந்தார். அப்போது அந்த நபர் பெண்ணை அப்படியே சாலையில் விட்டுவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடி விட்டார். நீண்ட நேரமாக அப்பெண் மயங்கி கிடந்த நிலையில், அந்த இடத்துக்கு வந்த கிராம மக்கள் இது பற்றி காவல்துறையினருக்கு தகவலளித்தனர். பின் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையில் கொடூரமாக தாக்கிய அந்நபர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 151ன் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
https://twitter.com/ShubhamShuklaMP/status/1606624744706830340?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1606624744706830340%7Ctwgr%5Ee4b465159d5e0df78078e0baaf416bdc574532d8%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.dailythanthi.com%2FNews%2FIndia%2Fman-thrashes-his-lover-leaves-her-unconscious-on-road-arrested-865097