Categories
உலக செய்திகள்

மனசாட்சியே இல்லாமல்… 2 குழந்தைகளின் கண்முன்னே தாயை சீரழித்த கொடூரர்கள்… சரியான தண்டனை கொடுத்த நீதிபதி…!!

பெண்ணை சீரழித்து பணம்,நகையை திருடி சென்ற இளைஞர்களுக்கு நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி பாகிஸ்தானிய பெண் ஒருவர் தனது 2 குழந்தைகளுடன் காரில் லாகூருக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது காரில் உள்ள எரிபொருள் திடீரென்று காலியாகி விட்டதால் ஆள்நடமாட்டம் குறைவான பகுதியில் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து நின்றுள்ளார். பிறகு அவர் உறவினருக்கு செல்போனில் அழைத்து உதவி கேட்டுள்ளார். அவரது உறவினர் அவசர உதவிக்கு குழுவினருக்கு தகவல் தெரிவிக்குமாறு கூறியுள்ளார்.

ஆலோசனையின் பெயரில் அந்தப் பெண் அவசர உதவி குழுவினருக்கும் தகவல் தெரிவித்து விட்டு காத்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அபித் மால்கி மற்றும் சப்கத் அலி பக்கா  என்ற இரண்டு இளைஞர்கள் பெண்மணியின் அருகில் வந்துள்ளனர். நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம் என்று கூறிவிட்டு அவரை பலமாக தாக்கி அருகில் உள்ள வயல் வெளிக்கு இழுத்துச் சென்று குழந்தைகளின் கண் முன்னே அவரை சீரழித்துள்ளனர்.

மேலும் அந்த பெண்ணிடமிருந்து  இருந்த பணம் நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு அந்த இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர் . பின்னர் எரிபொருளுடன் சம்பவ இடத்திற்கு வந்த உறவினரிடம் தனக்கு நடந்த  துயரங்கள் குறித்து  அந்த பெண் கூறியுள்ளார். அதற்குப் பிறகு இருவரும் சேர்ந்து காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர்.

ஆனால் அந்த காவல்துறை அதிகாரி ஊடகத்தின் முன்பு, “ஆள் நடமாட்டமே இல்லாத சாலை என்று தெரிந்தும் அவர்  ஏன் அந்த வழியாக சென்றார் என்றும் அதுவும் பிள்ளைகளுடன் செல்ல தெரிந்த அவருக்கு எரிபொருள் இருந்ததா என்பதை பார்க்க தெரியவில்லையா? என்று கேட்டார். இந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் 2 இளைஞர்களயும்  காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய நிலையில் நீதிபதி இருவருக்கும் மரண தண்டனை விதித்துள்ளார்.

Categories

Tech |