பெண்ணை தாக்கியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள புதியம்புத்தூர் பகுதியில் முத்துமணி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் ஜெய்சங்கர் என்பவருக்கும் கோவில் நிர்வாகம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் முத்துமணி வீட்டிற்குள் ஜெய்சங்கர் அத்துமீறி நுழைந்ததோடு அவரது மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து முத்துமணி புதியம்புத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஜெய்சங்கரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.