குடிக்க தண்ணீர் பிடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் பெண்ணை தாக்கிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வடகாடு பகுதியில் ராசாத்தி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் சீனிவாசன் என்பவருடன் ராசாத்திக்கு குடிநீர் பிடிப்பதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்ட போது சீனிவாசன் ராசாத்தியை கம்பால் தாக்கியுள்ளார்.
இதனால் காயம் அடைந்த ராசாத்தி சீனிவாசன் மீது வடகாடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் சீனிவாசனை கைது செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.