பெண்ணிடம் 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுந்தரராமபுரம் பகுதியில் சந்திரா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆண்டாள் தெரு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் சந்திரா கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் என்று கூறப்படுகிறது. இது குறித்து சந்திரா தூத்துக்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அதே பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாப்பா என்பவர் சென்று கொண்டிருந்த போது மர்ம நபர் ஒருவர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 1 1\2 பவுன் தங்கச்சங்கிலியை அவரிடம் இருந்து பறித்து சென்றுள்ளார். இது தொடர்பாக பிரட்ரிக் என்பவரை தனிப்படை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.