Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சைக்கிளில் சென்ற பெண்…. வழிப்பறியில் ஈடுபட்ட மர்மநபர்…. போலீஸ் வலைவீச்சு….!!

பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோரம்பள்ளம் சீனிவாசா நகர் பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி உள்ளார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கவிதா சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது சீனிவாசா நகர் 1-வது தெருவில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென கவிதா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து கவிதா புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |