சென்னை திருவல்லிக்கேணியில் செயின் பறிக்க சிறுவனுக்கு பயிற்சி அளித்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
திருவல்லிக்கேணியை சேர்ந்த லட்சுமி நேற்று பார்த்தசாரதி சுவாமி தெருவில் நடந்து வந்தபோது அவரது கழுத்தில் இருந்த 3 சவரன் தங்க நகையை சிறுவன் ஒருவன் பறித்துச் சென்றான். இதுதொடர்பாக லட்சுமி அளித்த புகாரின் பேரில் ஐசுஸ் பகுதி போலீசார் விசாரணை நடத்தினர்.
சிசிடிவி காட்சியின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் விஜய், சக்திவேல் மற்றும் 17 வயது சிறுவன் ஒருவனை கைது செய்தனர். விசாரணையில் விஜய்யும் சக்திவேலும் இணைந்து கொள்ளை அடிப்பது எப்படி என்ற சிறுவனுக்கு பயிற்சி அளித்தது தெரியவந்தது. செயின் பறித்தவர்கள் சிசிடிவியில் சிக்கியதால் கைது செய்யப்பட்டனர்.