Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேலை ரெடியா இருக்கு….. ஆர்வத்துடன் சென்ற பெண்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

வேலை வாங்கி தருவதாக கூறி நூதன முறையில் பெண்ணிடம் உள்ள நகை மற்றும் செல்போனை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள மிண்ட் மாடர்ன் சிட்டியில் நூர்ஜஹான் என்ற பெண் வசித்து வருகிறார். இவர் ஆன்லைன் மூலம் தனியார் வேலை வாய்ப்புக்காக விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் செல்போன் மூலம் வினோத் குமார் என்ற வாலிபர் நூர்ஜஹானை தொடர்புகொண்டு ராயப்பேட்டை லூயிஸ் சாலைக்கு வாருங்கள் என்று அழைத்துள்ளார். இதனை நம்பிய நூர்ஜஹான் வேலை கிடைக்க போகிறது என நினைத்து அங்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

இதனையடுத்து தேர்வுக்கு செல்லும்போது நகை அணிந்திருக்கக் கூடாது எனக்கூறி நூர்ஜஹான் அணிந்திருந்த 2 1/2 பவுன் தங்க நகைகள், செல்போன் போன்றவற்றை வினோத்குமார் வாங்கியுள்ளார். அதன் பிறகு சிறிது நேரம் இங்கேயே இருங்கள் எனக் கூறிவிட்டு வினோத்குமார் லாயிட்ஸ் காலனி அரசு அதிகாரிகள் குடியிருப்புக்குள் சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வராததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நூர்ஜஹான் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |