Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பெண்…. வழிப்பறியில் ஈடுபட்ட மர்மநபர்…. போலீஸ் வலைவீச்சு….!!

பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த மர்மநபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வேலாயுதம்பாளையம் பகுதியில் நல்லசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாசிலாமணி என்ற மனைவி உள்ளார். இவர் முத்தூர் கொடுமுடி சாலையில் உள்ள சின்னமுத்தூர் பெரிய கடைத் தெருவில் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் மாசிலாமணி தனது வீட்டில் இருந்து பால் கடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது முத்தூர்-ஈரோடு சாலையில் தண்ணீர் பந்தல் அருகே வந்து கொண்டிருந்தபோது மர்மநபர் ஒருவர் மாசிலாமணியின் கழுத்தில் கடந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த மாசிலாமணி பலத்த காயமடைந்தார். இதுகுறித்து மாசிலாமணி வெள்ளகோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |