பெண்ணிடம் பணம் மோசடி செய்த காவலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள பெரியார் காலனி பகுதியில் மதனா என்பவர் வசித்து வருகிறார். இவர் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியரிடம் மதனா அளித்த மனு தொடர்பாக போனில் தொடர்பு கொண்டு பட்டா வாங்கி தருகிறேன் என கூறி அவரை வரவழைத்து ரூ.2000 பெற்றுக் கொண்டு தலைமறைவாகியுள்ளார்.
இதுகுறித்து மதனா மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். அதன்படி மாவட்ட ஆட்சியர் குற்றவாளியை பிடிக்க காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த விசாரணையில் சூசையாபுரம் பகுதியில் வசிக்கும் காவலாளி ஜான்பீட்டர் பண மோசடியில் ஈடுபட்டது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஜான் பீட்டரை கைது செய்துள்ளனர்.