Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

நடந்து சென்று கொண்டிருந்த பெண்…. வழியில் நடந்த சம்பவம்…. மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு….!!

நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் தங்க சங்கிலி பறிக்க முயன்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். 

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள  அண்ணான்டபட்டி ஆலவட்டம் பகுதியில் கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கீதாவும் அதே பகுதியில் வசிக்கும் தீபா என்பவரும் அப்பகுதியில் உள்ள ஒரு மளிகைக்கடைக்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். இதனையடுத்து காந்திநகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த 2 மர்மநபர்களில் ஒருவர் திடீரென கீதா அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார். ஆனால் சங்கிலி கீதாவின் ஜாக்கெட்டுக்குள் சிக்கியதால் அதிர்ஷ்டவசமாக தப்பியது.

இதனையடுத்து கீதா சங்கிலியை பறிக்க முயன்றவரின் கையை பிடித்துக் கொண்டு திருடன் திருடன் என கூச்சலிட்டுள்ளார். ஆனால் மர்மநபர் அதற்குள் கீதாவின் கையை தட்டி விட்டு மோட்டார்சைக்கிளில் அங்கிருந்து  தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து கீதா ஜோலார்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து சங்கிலியை பறிக்க முயன்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |