டெல்லியில் பெண்ணிடம் செல்போனை பறித்து சென்ற 2 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்லி சலிமர் பகா பகுதியில் கடந்த திங்களன்று ஒரு பெண் ரோட்டில் நடந்து சென்று கொண்டியிருந்தார். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் எதிர்பாராத விதமாக அந்த பெண்ணிடம் இருந்த செல்போனைப் பறித்தனர். ஆனால் செல்போனை அந்த பெண் கையில் இறுக்கமாக பிடித்து கொண்டார். இதனால் அவர்கள் 2 பேரும் பெண்ணை நடு ரோட்டில் சுமார் 200 மீ வரை இழுத்துச் சென்று உள்ளனர். இச்சம்பவத்தின் வீடியோவானது சமூக வளைதங்களில் வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பெண்ணிடம் செல்போன் பறித்து சென்ற இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பிடிபட்ட விக்ரம் (37) என்பவர் மீது 96 வழக்குகளும், மற்றும் சந்தீப் மீது 142 வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ளது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இருவரிடமும் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.