Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நடந்து சென்று கொண்டிருந்த பெண்…. சில்மிஷத்தில் ஈடுபட்ட மாணவர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

இளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காமராஜர் நகர் பகுதியில் 21 வயதான இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூர் புஷ்பா ரவுண்டானா அருகில் உள்ள ஆடிட்டர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அந்த இளம்பெண் கொங்கணகிரி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் அந்த இளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு, மானபங்கப்படுத்த முயற்சி செய்துள்ளார். இதுகுறித்து அந்த இளம்பெண் திருப்பூர் வடக்கு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அந்த வாலிபர் திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியில் வசிக்கும் ஆசிக் முகமது என்பதும், இவர் திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வருவதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ஆசிக் முகமதை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |