பெண்ணின் கழுத்தை கத்தியால் அறுத்த இளைஞர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் St. Gallen Rhine Valley என்ற பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் குற்ற சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது அந்த குற்ற சம்பவம் நடந்த சனிக்கிழமை காலை 18 வயது இளம்பெண் ஒருவர் அவரது குடியிருப்பில் சோபாவில் அமர்ந்திருந்துள்ளார்.
இதனை அடுத்து 19 வயதுடைய இளைஞர் ஒருவர் அப்பெண்ணின் பின்னால் இருந்து கத்தியால் அவரின் கழுத்தை அறுத்துள்ளார். இதனை தொடர்ந்து அந்த பெண் அவரிடம் இருந்து தப்பிப்பதற்காக கடுமையாக போராடியுள்ளார். மேலும் உதவிக்காக அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார்.
இதனால் அந்த இளைஞர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். குறிப்பாக படுகாயமடைந்த அந்த இளம்பெண் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போது அந்த இளைஞர் மது போதையில் இருந்துள்ளார் என்றும் கஞ்சா பயன்படுத்தியுள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது.
இதனை அடுத்து இவ்வழக்கில் அவர் மீது திட்டமிட்ட கொலை முயற்சி என்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக குற்றம் சாட்டப்பட்ட அந்த இளைஞருக்கு 7 வருடங்கள் சிறை தண்டனையும் 200 பிராங்குகள் அபராதமும் விதிக்கப்பட வேண்டும் என்று அரசு தரப்பினர் நீதிமன்றத்தில் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர்.