பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தாளிக்கால் கிராமத்தில் செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் அருகில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் போது அதே பகுதியில் வசிக்கும் சுரேஷ் என்பவருக்கும் இவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் சுரேஷ் தவறான வார்த்தைகளால் பேசி கைகளால் செல்வியை அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது பற்றி செல்வி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுரேஷை கைது செய்துள்ளனர்.