பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள பாரதி நகர் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஒரு பெண்ணின் வீட்டிற்கு சென்ற பாலமுருகன் அங்கு யாரும் இல்லாததை அறிந்து வாய் பேச முடியாத நிலையில் இருந்த அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்த மற்றொரு பெண் ஒருவர் பாலமுருகனை கண்டித்துள்ளார்.
அதற்கு பாலமுருகன் இங்கு நடந்ததை யாரிடமும் கூறக்கூடாது என அந்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த சங்கரன்கோவில் காவல்துறையினர் பாலமுருகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.