பெண்ணிடம் நகை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள டவுன் ஹால் பகுதியில் கெஜலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அன்வர்திகான் பேட்டையில் இருக்கும் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் நாள்தோறும் தனது வீட்டில் இருந்து பள்ளிக்கு ஸ்கூட்டரில் சென்று வருகிறார்.
அதன்பின் வழக்கம் போல் பள்ளியில் இருந்து வீடு திரும்பிய நிலையில் சித்தேரி பகுதியின் அருகில் வரும் போது அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் கெஜலட்சுமியின் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் செயினை பறித்துச் சென்றுள்ளனர்.
இது பற்றி கெஜலட்சுமி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் இருக்கும் கண்காணிப்பு கேமராவின் பதிவுகளை கொண்டு செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.