பெண்ணிடம் மர்ம நபர்கள் நகையை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு வள்ளி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வள்ளி சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 நபர்கள் அவர் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி செய்துள்ளனர்.
அப்போது வள்ளி சத்தம் போட்டதால் அருகில் இருந்தவர்கள் மர்மநபர்களை நோக்கி ஓடி வந்த போது இதை பார்த்த அவர்கள் சங்கிலியை வேகமாக இழுத்துள்ளனர். இதனையடுத்து பாதி நகை வள்ளியின் கையிலும் மற்றும் மீதி நகை மர்ம நபர்களின் கையிலும் சிக்கிய நிலையில் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இது தொடர்பாக வள்ளி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.